.

Thiruppugazh Lyrics

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை - நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை - அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை - யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது - மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் - குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி - லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு - சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு - பெருமாளே.
Report lyrics
Top Vani Jayaram Lyrics